நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வரையிலும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தை மண் கொண்டு மூடியுள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது தூசுக்கள் பறந்து புழுதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சாலையை உடனே சீரமைக்கவும், அதுவரையிலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?