சேலம் மாவட்டம் தாரமங்கலம்-தொளசம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் தொளசம்பட்டி பிரிவு ரோடு அடுத்து ஏரிக்கொடி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு இதுவரை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?