கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. மேலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றிதிரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.