மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி பாலத்தின் மீது தார்சாலை பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை ஏற்றி, இறக்குவதால் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்களும் பழுதடைகின்றது. இதனை தவிர்க்க பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்