குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-24 17:40 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமம் கூட்டுறவு வங்கியில் இருந்து ஊராட்சி மன்ற அலுவலகம் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகா்ந்து செல்லும் நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்