திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ராஜா தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. மேலும் மழை காலங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருக்கும் இந்த சாலையால் தொடர் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?