சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இருந்து கிராமத்து ராவுத்தூர் பிரிவு மற்றும் கண்ணம்பாளைம் பிரிவு ஆகிய பகுதிகளில் நடுரோட்டில் குழிகள் உள்ளன. இந்த குழிகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். இரவில் குழிகள் இருப்பது தெரியாத நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதே நிலைதான், மழை பெய்யும்போதும் காணப்படுகிறது. இதனால் தினந்தோறும் விபத்துகள் அரங்கேறி வருகிறது. எனவே அந்த சாலையில் உள்ள குழிகளை உடனடியாக மூட வேண்டும்.