புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் இருந்து ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்திற்கு செல்லும் ஏம்பக்கோட்டை முனிஅய்யா கோவில் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.