சாலை அகலப்படுத்தப்படுமா?
ராஜாக்கமங்கலத்தில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கல்லுக்கட்டியில் இருந்து ஆறுதெங்கன்விளைக்கு செல்லும் சாலையில் தினமும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என ஏராளமானவை சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகியதாக காணப்படும் சாலையை அகலப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், ஆறு தெங்கன்விளை.