சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-10 13:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் , நசரத்பேட்டை ஊராட்சி மன்றம், ராஜீவ்காந்தி நகர் 2- வது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை சரியான முறையில் போடாததால், சிறிய மழை பெய்தாலும் மழைநீா் சாலையில் தேங்கி விடுகிறது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி வழியாக யாரும் நடக்க முடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்