சேறும், சகதியுமான சாலை

Update: 2023-12-10 11:40 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டியிலுள்ள கூட்டுறவு சங்கத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் உரம் மற்றும் பிற உணவுப்பொருட்களை வாங்க வரும்போது மழை பெய்யும்போது, சாலை சேறும்-சகதியுமாக உள்ளதால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்