சூலூர் தாலுகா காடாம்பாடி ஊராட்சி சங்கத்துறை கிராமத்தில் இருந்து மாதப்பூர் செல்லும் சாலை கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை அமைத்த அரசு அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றி.