பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியின் பல பகுதிகளில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை பெய்யும் போது குழிகளில் தண்ணீர் தேங்கி நின்று கொசு உற்பத்தி பெருகி உள்ளது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே அங்கு சாலை அமைத்தால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.