கோவைப்புதூரில் இருந்து புட்டுவிக்கி பாலம் வழியாக உக்கடம் செல்லும் சாலை, அந்த பகுதியில் உள்ள குளம் அருகே மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.