குண்டும் குழியுமான சாலை

Update: 2023-12-03 13:08 GMT

சிவகங்கை மாவட்டம் அதிகரை கிராமம் தெற்குத்தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் உள்ள சாலை  மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்