குண்டும் குழியுமான சாலை

Update: 2023-12-03 11:58 GMT

காட்பாடி வி.ஜி. ராவ் நகர் சி.செக்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், முதியோர் அவதிப்படுகின்றனர். சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, காட்பாடி. 

மேலும் செய்திகள்