சேறும், சகதியுமான சாலையால் அவதி

Update: 2023-11-26 17:57 GMT
விழுப்புரம் வழுதரெட்டி பெரியார் தெருவில் பாதாள சாக்கடை தி்ட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டது. ஆனால், பள்ளம் சரியாக மூடப்படாமலும், புதிதாக சாலை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் சக்கரம் சேற்றில் சிக்கி கொள்கின்றன. எனவே பள்ளத்தை சரியாக மூடி, அங்கு புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்