கூடலூரில் இருந்து ஏகலூத்து வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.