மதுரை ஜெயந்திபுரம் பாரதியார் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?