பவானிசாகர் கொத்தமங்கலம் ஊராட்சி உப்புபள்ளத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாலை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சேறும், சகதியுமாக இருப்பதால் பள்ளிக்கூட மாணவர்கள் அந்த வழியாக நடந்து செல்ல அவதிப்படுகிறார்கள். உடனே தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?