கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. அந்த சாலையில் மண்ணையும், கற்களையும் கொண்டு குழிகளை மூடி உள்ளனர். ஆனால் முறையாக மூடப்படாததால், மேடு-பள்ளமாக கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வோரும் தவறி விழும் சம்பவங்கள் நிகழ்கிறது. எனவே அந்த சாலையை முறையாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.