குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-19 18:00 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்