விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.