ஒட்டன்சத்திரம் அருகே வெரியப்பூரில் இருந்து கன்னிமார் கோவில் புதூர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.