சேறும், சகதியுமான சாலை

Update: 2023-11-19 13:03 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் காடூர் ஊராட்சி நல்லறிக்கை ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் மழையில் மண் சாலையானது சேறும், சகதியமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்