சிதம்பரம் அருகே வல்லம்படுகை-குருவாடி சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.