களக்காடு- சேரன்மாதேவி மெயின் ரோட்டில் பத்மனேரி பிளவுக்கல் இசக்கியம்மன் கோவிலில் இருந்து பத்மனேரி பாலம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.