சேறும், சகதியுமான சாலை

Update: 2023-10-29 16:52 GMT
கம்மாபுரம் ஒன்றியம் பெரியகாப்பான்குளம் கிராமத்தில் உள்ள மேற்கு மற்றும் வடக்கு தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்