வருகதட்டு பகுதியில் இருந்து வெள்ளிமலைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது பெய்த கனமழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி வாகனங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.