நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதுடன், சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.