அந்தியூர் சத்தி ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக வாகன போக்குவரத்து காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்தியூரில் இருந்து முனியப்பம்பாளையம் வரையுள்ள சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.