திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சோழவரத்தில் இருந்து புதூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கந்தலாகி கிடக்கிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும், சிறிது மழை பெய்தாலே மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்.