விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து வீரமூர், கெடார் செல்லும் வழியில் சாலை வசதி இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால், கால விரையம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.