சேலம் கொண்டலாம்பட்டி ெரயில்வே பாலத்தில் இருந்து பி.நாட்டாமங்கலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக பி.நாட்டாமங்கலம், தீரானூர், தம்மநாயக்கன்பட்டி, கொழிஞ்சிப்பட்டி ஆகிய ஊர் மக்கள் பள்ளி, மருத்துவமனை செல்வதற்கு இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.