சிவகங்கை மாவட்டம் வள்ளனேரி ஊராட்சி மேலவெள்ளஞ்சி கிராமத்தில் தெற்கு தெருவில் சாலையை உடைத்து அதன் குறுக்கே கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. பின்னர் அந்த உடைப்பை சரி செய்ய சாலையில் மேல் தளம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மேல்தளம் உடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையின் மேல்தளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும