கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது. இதனை தார்சாலையாக மாற்றும் பணி தொடங்கி சாலையில் ஜல்லி கற்கள் நிறப்பப்பட்டுள்ளன. ஆனால் ஒருமாதம் ஆகியும் இன்னும் பணி முடிவடையாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.