நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் நடுக்கடை கடைத்தெரு சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் சிறு,சிறு விபத்துகளும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?