கிருஷ்ணகிரி நகரில் நாளுக்கு ஒரு வேகத்தடை அமைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை மற்றும் பெங்களூரு சாலையில் மட்டும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் 9 வேகத்தடைகள் உள்ளன. இரவு நேரத்தில் இதில் பல வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் விபத்துகள் நடக்கின்றன. நகருக்குள் ஜக்கப்பன் நகர், பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் புதிது புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேகத்தை குறைப்பதற்காக வேகத்தடைகளா அல்லது விபத்தை ஏற்படுத்த இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என கூறும் அளவுக்கு நகரில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே நகருக்குள் தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.