சாணார்பட்டி அருகே பள்ளப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள ஒரு தெருவுக்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மண்பாதையில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.