உத்தமபாளையம் புதிய புறவழிச்சாலையில், கோகிலாபுரம் விலக்கு பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.