திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம், பேட்டை மேடு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. சாதாரன மழைக்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.