கோவை பீளமேடு ரெயில்வே பாலத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் தார்சாலை கள்ளிமேடு தெருவில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த குழிகளில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.