சாலையை கடக்க மக்கள் சிரமம்

Update: 2023-10-01 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். மேலும் கந்தசாமி கோவிலுக்கு செல்பவர்கள், பள்ளிக்கூடம், பால் சொசைட்டி, வார சந்தை போன்ற இடங்கள் இந்த பகுதியில் இருப்பதால் மக்கள் சாலையை கடக்க சிரமப்படுகிறார்கள். எனவே வாகனங்கள் வேகமாக வருவதை தடுக்க வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்