பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவில் இருந்து கோவை-ஈரோடு செல்லும் சாலையை இணைக்கும் மிக முக்கியமான இணைப்புச் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?