வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-10-01 11:45 GMT

நாகை மவாட்டம் திட்டச்சேரி-திருமருகல் சாலை பகுதி நடக்கடை கடைத்தெருவில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களில் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்