பழனி திருநகரில் திண்டுக்கல் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பணிகள் நடக்கும் பகுதிகளில் முறையான பாதுகாப்பு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், இரவில் ஒளிரும் எதிரொலிப்பான் போன்றவற்றை வைக்க வேண்டும். இல்லை எனில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.