ராமநாதபுரம் மாவட்டம் சேரந்தை, தனிச்சியம், சேனாங்குறிச்சி,டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பயணிக்கும் முக்கந்தர் பஸ் ஸ்டாப்பில் இருந்து டி.கிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.