சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-09-24 17:54 GMT
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் கே.கே. நகர் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டி கடந்த 1 மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் அங்கு புதிதாக சாலை அமைக்காததால், மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் போது சேற்றில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்