கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி நகர் லே அவுட் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிந்த பிறகு குழியை சரிவர மூடவில்லை. இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த குழியை உடனடியாக மூட வேண்டும்.