கோவை பாலசுந்தரம் சாலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் எதிரே செங்காடு பகுதிக்கு செல்லும் பிரிவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செங்காடு பகுதியில் இருந்து பாலசுந்தரம் சாலைக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.